ஊர்க்காவல் படை தேர்வு; 321 பேர் பங்கேற்பு
ஊர்க்காவல் படைக்கு 321 பேர் பங்கேற்றனர்
மதுரை
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் உத்தரவின் பேரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. அதன்படி, 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 3 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 353 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும், மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு வர அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில், 266 ஆண்கள், 54 பெண்கள் மற்றும் 1 திருநங்கை உள்பட மொத்தம் 321 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். தேர்வானவர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story