ரூ.4½ கோடியில் வீடுஅடமானம், தனிநபர் கடன்
ரூ.4½ கோடியில் வீடுஅடமானம், தனிநபர் கடன் வழங்க விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி கூட்டத்தில் தீர்மானம் தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வங்கியின் தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். இதில் வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமதாஸ், பொது மேலாளர் (பொறுப்பு) குமார், வங்கி இயக்குனர்கள் தனுசு, வக்கீல் செந்தில், பாஸ்கரன், கலைச்செல்வன், நித்யா, தாயம்மாள், ராஜேஸ்வரி தயாளுபதி, மேலாளர் ஜெயராமன், துணை மேலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், வங்கியில் வழங்கப்பட்ட நகைக்கடன்களின் வைப்புதாரர்கள் மற்றும் கடன்தாரர்கள் இறந்ததை முன்னிட்டு அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்குவது, உறுப்பினர்களின் அடமான கடன், தனிநபர் கடன் விண்ணப்பங்களை அனுமதிப்பது, விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி மற்றும் கிளை வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களின் ஒப்பந்தம் முடிவடைவதால் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வது, விழுப்புரம் நகர வங்கியின் 104-வது பேரவை கூட்டத்திற்கு செலவு செய்த செலவு தொகையை பின்னிருப்பு செய்தல், விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி தலைமையகத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை கூடிய விரைவில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி திறக்க இருப்பதால் அதற்கு ஏ.டி.எம். மையத்தின் பாதுகாப்பு கருதி யு.பி.எஸ். மற்றும் மின்கலம் வாங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வீட்டு அடமான கடன் ரூ.4 கோடியும், தனிநபர் கடன் ரூ.50 லட்சமும் வழங்குவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.