வீடுபுகுந்து மோட்டார் சைக்கிள்வாஷிங் மிஷின் தீவைத்து எரிப்பு


தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே வீடுபுகுந்து மோட்டார் சைக்கிள் வாஷிங் மிஷின் தீவைத்து எரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள எம். சவேரியார்புரம் அந்தோணியார் சாலையைச் சேர்ந்த சூசை ராஜ்குமார். மகன் ராஜ பிரதீப் (வயது 21). கட்டிட தொழிலாளி. கடந்த 5-ந்தேதி முள்ளக்காடு ராஜிவ் நகரை சேர்ந்த இவரது நண்பரான பரத்தை, முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்த பானா வேல்முருகனும் ராஜிவ் நகரைச் சேர்ந்த சுலோசின் என்பவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதை அறிந்த ராஜ பிரதீப் கடந்த 8-ந்தேதி சுலோசினை தாக்கி எச்சரித்துள்ளார். இதை தொடர்ந்து பானா வேல்முருகன் செல்போன் மூலமாக ராஜபிரதிப்பை மிரட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 9- ந்தேதி இரவு ராஜபிரதிப் வீட்டின் ஒரு அறையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலையில் அந்த மோட்டார் சைக்கிளும், அந்த அறையில் இருந்த வாஷிங்மெஷினும் தீவைத்து எரிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story