யுனிவர்சல் மெட்ரிக்குலேஷன் பள்ளி நிறுவனருக்கு கவுரவ டாக்டர் பட்டம்


யுனிவர்சல் மெட்ரிக்குலேஷன் பள்ளி நிறுவனருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி சாலையில் அமைந்துள்ள யுனிவர்சல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரி நிறுவனரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மாநில இணை செயலாளரும், திருப்பத்தூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் தலைவரும் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க செயலாளருமான கே.எஸ்.சிவப்பிரகாசம் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பான கல்வி சேவை செய்தமைக்கு, அவருக்கு அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைகழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் அமெரிக்கா உலக தமிழ் பல்கலைகழகம் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சர்வதேச தமிழ் பல்கலைக் கழக செயலாளர் அனிதா கபிலர் வரவேற்றார். சர்வதேச தமிழ் பழக பல்கலைகழக தலைவர் சாந்தி ஓமகண்டம் தலைமை தாங்கினார். முன்னாள் நீதிபதி பா.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் கே.எஸ்.சிவப்பிரகாசத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், கவிஞர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழகம் செய்தி மக்கள் தொடர்பு தகவல் அலுவலர் தங்கச்செல்வன் நன்றி கூறினார். கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற கே.எஸ்.சிவப்பிரகாசத்திற் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள், திருப்பத்தூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story