கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 101 கவுரவ விரிவுரையாளர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர் ஜெய்பிரகாஷ், செயலாளர் நடராஜன் உள்பட கல்லூரியில் பணியாற்றும் 63 கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
அரசாணை எண் 246, 247, 248 ஆகியவற்றை அரசு திரும்பப் பெற வேண்டும், அரசாணை 56-ன் படி நடந்து முடிந்த சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நெடுங்காலமாக பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்கும் வேண்டும், ராஜஸ்தான், ஒடிசா, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் தற்காலிக பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அந்த மாநில முதல்வர்கள் அறிவித்தது போல் தமிழகத்திலும் மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சரை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.