கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
x

வாலாஜா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லுாரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் வேலூர் மண்டல தலைவர் மலர்கொடி தலைமை தாங்கினார். கிளை பொறுப்பாளர்கள் ராஜஸ்ரீ, மீனாட்சி, பிரேமகுமாரி, அறிவுக்கரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கவுரவ விரிவையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கல்லூரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நேர்காணல் முறையை பின்பற்ற வேண்டும். எழுத்துத் தேர்வு முறையை கைவிட வேண்டும். அரசாணை 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) கருப்பு பேட்ஜ் அணிந்து வாயிற் முழக்க போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story