கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
x

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணா வளைவு பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் பயின்று வருகின்றனர். மேலும் இந்த கல்லூரியில் 29 கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள், மண்டல செயலாளர் பிரகாஷ் தலைமையில் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நேற்று வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையையும், எழுத்து முறையை தொடர்ந்து பின்பற்றவும், தேர்வு முறையைக் கைவிடவும் வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் குறித்து விரிவுரையாளர்கள் விவரித்து பேசினார்கள். இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற பெண் கவுரவ விரிவுரையாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story