லாரியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி
கரூரில் லாரியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
மாணவர் படுகாயம்
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் அரவிந்த் நகரை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் வைஷ்னா (வயது 12). இவர் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் வைஷ்னா அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் ஏறி விளையாடி கொண்டிருந்தார். அப்போது லாரியின் கதவு வைஷ்னா மீது இடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
பலி
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் படுகாயம் அடைந்த வைஷ்னாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வைஷ்னா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வைஷ்னா உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.