குதிரை வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள்
பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற குதிைர வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட குதிரைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 6 மாவட்டங்களை சேர்ந்த வீரா்கள் பங்கேற்றனர்.
கரம்பயம்
பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற குதிைர வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட குதிரைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 6 மாவட்டங்களை சேர்ந்த வீரா்கள் பங்கேற்றனர்.
குதிரை வண்டி பந்தயம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைக்காடு ஊராட்சியில் ஆண்டுதோறும் குதிரை வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம். கடந்த 32 ஆண்டுகளாக அணைக்காடு கிராம மக்கள் நடத்தும் இந்த குதிரை வண்டி பந்தயம் நேற்று நடந்தது. இந்த குதிரை வண்டி பந்தயத்திற்கு அணைக்காடு கிராமத்தை சேர்ந்த சகாயராஜ், எலியட் வேதநாயகம் மற்றும் பலர் தலைமை தாங்கினர். குதிரை வண்டி பந்தயத்தை பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜெயபாரதி விசுவநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.நேற்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு. முதல் பரிசு, 2-ம் பரிசு, 3-ம் பரிசு, 4-ம் பரிசுகளும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்ததை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். வீரர்களும் குதிரைகளை இலக்கை நோக்கி செலுத்துவதில் ஆர்வம் காட்டினர்.
ரூ.1¾ லட்சம் பரிசு
புது குதிரை, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை, உள்ளூர் குதிரை, என 5 வகையாக குதிரைகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 500 பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இந்த பந்தயங்களில் தஞ்சை, ராமநாதபுரம், மதுரை, சேலம், நாகை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து குதிரைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். குதிரை வண்டி பந்தய ஏற்பாடுகளை ஊர் மக்கள், விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.