குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா


குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி காதலிதேவன்காடு மண்டகபடி உபயதாரர்கள் சார்பில் குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து யானை வாகனத்தில் அம்மன் வீதியுலாவும், வாண வேடிக்கையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நாட்டாண்மைகள், மண்டகபடி உபயதாரர்கள் செய்து இருந்தனர்.


Next Story