சேதமடைந்த வாழைகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு


சேதமடைந்த வாழைகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு
x

மாவட்டத்தில் கன மழையால் சேதமடைந்த வாழைகளை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை

வாழைகள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் புதுக்கோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் கணக்கில் வாழைகள் சேதமடைந்தன. குலை தள்ளிய நிலையில் இருந்த வாழைகள் சரிந்து விழுந்ததால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

கணக்கெடுப்பு

இந்த நிலையில் சேதமடைந்த வாழைகளை கணக்கெடுக்கும் பணியை தோட்டக்கலை துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் தாலுகா வாரியாக இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

மாவட்டத்தில் சேதமடைந்த வாழைகள் கணக்கெடுப்பு பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும். அதன்பின் சேதத்தின் விவரம் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் அரசு மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சுமார் 400 ஏக்கர் வரை சேதம் இருக்கும் என கருதப்படுகிறது. ஒவ்வொரு விவசாயிகளும் கணக்கெடுக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story