ரூ.8 கோடியில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி


ரூ.8 கோடியில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி
x

தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் ரூ.8 கோடியில் மாணவர்களுக்கான தங்கும் விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வேலூர்

வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி ரூ.8 கோடியே 43 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதையடுத்து கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, வளாகத்தினை பார்வையிட்டனர். அப்போது, மாநகராட்சி பகுதிகளில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த விடுதி 150 படுக்கை வசதிகளுடன் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புத்தகஅறை, சமையல் அறை, உணவு உண்ணும் அறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஸ்ரீராம்பாபு, வேலூர் உதவி கலெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story