ஓட்டலில் தீ விபத்து


ஓட்டலில் தீ விபத்து
x
திருப்பூர்


சேவூர் கைகாட்டி பகுதியில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் சமையல் செய்யும் இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் ெவளியேறினர். இதையடுத்து அவினாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.விசாரணையில், சிலிண்டரிலிருந்து வரும் டியூபின் கசிவால் கியாஸ் வெளியேறியதால் தீப் பற்றியதாக தெரிய வந்தது. தீப் பற்றியதை உடனடியாக பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story