ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை


ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
x

சேரன்மாதேவியில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியில் ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓட்டல் உரிமையாளர்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ராமசாமி கோவில் தெருவை சேர்ந்த வேம்பு என்பவரது மகன் ரமேஷ் (வயது 42). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இவர் சேரன்மாதேவி காந்தி பூங்கா அருகில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் வியாபாரம் இல்லாததால் அக்கம்பக்கத்தில் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.

தற்கொலை

தொடர்ந்து வியாபாரம் சரிவர இல்லாததால், கடனை திரும்ப செலுத்த முடியாமல் ரமேஷ் வேதனை அடைந்தார். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story