ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது


ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது
x

வள்ளியூரில் ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

ராதாபுரத்தை சேர்ந்தவர் ஜான் சிங் சீயோன் (வயது 47). இவர் வள்ளியூர் கோட்டையடி சிக்னல் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கும், பட்டிரைக்கட்டிவிளையை சேர்ந்த கணேசன் (53) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கணேசன், பட்டிரைக்கட்டிவிளையை சேர்ந்த சுந்தர் (24), பிரபாகரன் (31), கலைச்செல்வன் (24) மற்றும் சிலர் சேர்ந்து ஜான் சிங் சீயோனின் ஓட்டலுக்கு சென்று அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான் சிங் சீயோன் வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கணேசன் உள்பட 4 பேரையும் கைது செய்தார்.


Next Story