குளத்தில் மூழ்கி ஓட்டல் தொழிலாளி பலி


குளத்தில் மூழ்கி ஓட்டல் தொழிலாளி பலி
x

நாகூரில் குளத்தில் மூழ்கி ஓட்டல் தொழிலாளி பலியானார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 45).இவர் நாகூரை அடுத்த மேலவாஞ்சூரில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மதியம் நாகூர் ரவுண்டானா அருகில் உள்ள பால்குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் கால் தவறி தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்தார். குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அங்கு வந்து பார்த்த போது குளத்தில் முத்து பிணமாக கிடந்துள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story