மின்சாரம் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி சாவு


மின்சாரம் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி சாவு
x

மின்சாரம் பாய்ந்து ஓட்டல் தொழிலாளி சாவு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

புதுக்கடை அருகே உள்ள தோட்டவரம் பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 61). இவர் நித்திரவிளை அருகே மணக்காலை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் கடையின் அருகே நிற்கும் மின்கம்பத்தில் கையை வைத்த போது எதிர்பாராத விதமாக டென்னிஸ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே டென்னிஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story