கொல்லங்கோடு அருகே ஓட்டல் தொழிலாளி மர்ம சாவு


கொல்லங்கோடு அருகே ஓட்டல் தொழிலாளி மர்ம சாவு
x

கொல்லங்கோடு அருகே ஓட்டல் தொழிலாளி மர்மமாக இறந்தார்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே பனவிளை குற்றிக்காடு வீட்டை சேர்ந்தவர் முருகன் (வயது 55), ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதிக மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவர் நேற்று முன்தினம் மதியம் கடைக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இந்தநிலையில் நேற்று கண்ணனாகம் ஜங்ஷன் அருகே உள்ள ஒரு கடையின் வராண்டாவில் முருகன் மூக்கில் ரத்தம் வடிந்தபடி இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முருகன் மனைவி சுதா (49) கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story