தர்மபுரி மாவட்டத்தில் அகதிகள் குடும்பங்களுக்கு ரூ.10.91 கோடியில் புதிய வீடுகள் கலெக்டர் சாந்தி தகவல்


தர்மபுரி மாவட்டத்தில்  அகதிகள் குடும்பங்களுக்கு ரூ.10.91 கோடியில் புதிய வீடுகள்  கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் அகதிகள் குடும்பங்களுக்கு ரூ.10.91 கோடியில் புதிய வீடுகள் கலெக்டர் சாந்தி தகவல்

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் குடும்பங்ளுக்கு ரூ.10.91 கோடி மதிப்பில் 218 புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது என கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

அகதிகள் முகாம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் டொக்குபோதன அள்ளி ஊராட்சி சந்தனூரான் கொட்டாய் மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் பஞ்சப்பள்ளி ஊராட்சி சின்னாறு பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல அந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளை தரமாகவும், தாமதமின்றியும், விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பென்னாகரம் நாகாவதி அணை முகாம், பாலக்கோடு வட்டத்தில் கெசர்குளி அணை முகாம் மற்றும் சின்னாறு அணை முகாம் ஆகிய இடங்களில் ரூ.10.91 கோடி மதிப்பீட்டில் 218 புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தரைத்தளத்துடன் கூடிய வீடு

இதன்படி பாலக்கோடு சின்னாறு அணை அகதிகள் முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் 50 வீடுகள் கட்டுவதற்கும், கெசர்குளி அணை முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் 80 வீடுகள் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாகாவதி அணை முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் 88 வீடுகள் கட்டுவதற்கு வரைப்படங்களின் அடிப்படையில் 300 சதுரடி கொண்ட ஓடு பதித்த தரைத்தளத்துடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வீடு கட்டும் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மேலும் அந்தந்த முகங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட ஊரக வளரச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், தாசில்தார்கள் ஆறுமுகம், ராஜசேகர், அகதிகள் முகாம் தனி தாசில்தார் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, சுருளிநாதன், ரவி உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story