வீட்டில் புகுந்து 10½ பவுன் நகை திருட்டு
வீட்டில் புகுந்து 10½ பவுன் நகை திருடுபோனது
மதுரை
மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிஸ்குமார் (வயது 36). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பிய பின்னர் விஷேசத்திற்கு செல்வதற்காக பீரோவில் உள்ள நகையை எடுக்க திறந்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த 10½ பவுன் நகையை காணவில்லை. அதனை வீடு முழுவதும் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே யாரோ மர்மநபர் வீடு புகுந்து அந்த நகையை திருடி சென்று இருக்க வேண்டும் என்று நினைத்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story