வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
x

தஞ்சையில் வீடு புகுந்து 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருட்டு சென்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சை விளார் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருடைய மனைவி பிரேமலதா (வயது45). இவரும், இவரது மகள் துர்காவும் வீட்டின் முன் பக்க தாழ்வாரத்தில் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்றுமுன்தினம் அதிகாலை பின் பக்கக் கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளைத் திருடிக் கொண்டு, துர்கா கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியையும் பறித்தனர். இதனால் கண்விழித்த துர்கா சத்தம்போட, அந்த சத்தம் கேட்டு எழுந்த பிரேமலதாவும் கூச்சலிட்டனர். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story