வீடு புகுந்து நகை, பொருட்கள் திருட்டு
மதுரையில் வீடு புகுந்து நகை, பொருட்கள் திருட்டு போனது.
மதுரை
மதுரை ஒத்தக்கடை ராஜீவ்நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி சரண்யா (வயது 24). சம்பவத்தன்று, கணவன்- மனைவி இருவரும் வெளியூர் சென்று விட்டனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2½ பவுன் நகை, கிரைண்டர், விநாயகர் சிலை, செல்போன் உள்ளிட்ட ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த சித்திரைசெல்வன் (20) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story