கனமழைக்கு வீடு இடிந்து சேதம்
போடியில் கனமழைக்கு வீடு இடிந்து சேதமானது. மூதாட்டி உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தேனி
போடியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில் போடி புதூர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்த செல்வத்தின் மனைவி ராசாத்தி (வயது 60), அவருடைய உறவினர் ரஞ்சனி (20) ஆகியோர் வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதேபோல் போடி அருகே உள்ள கொட்டக்குடி மலைக்கிராமத்தில் அரசின் 20 தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த பகுதியில் பெய்த மழைக்கு அந்த வீடுகளுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. எனவே அங்கே தங்கியிருந்த மலைவாழ் மக்கள் பாதுகாப்பு கருதி அனைவரும் கொட்டக்குடி சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story