கோத்தகிரியில் மரம் விழுந்து வீடு சேதம்: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க மறுத்த தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு அபராதம்-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


கோத்தகிரியில் மரம் விழுந்து வீடு சேதம்:  பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க மறுத்த   தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு அபராதம்-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

கோத்தகிரியில் மரம் விழுந்து வீடு சேதமடைந்தது. இதில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க மறுத்த தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் மரம் விழுந்து வீடு சேதமடைந்தது. இதில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க மறுத்த தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மரம் விழுந்தது

கோத்தகிரி சேட் லைன் வியூஹில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் தனது வீட்டை கட்டுவதற்கு வங்கிக் கடன் பெறுவதற்காக தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வீட்டை 5 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகைக்கு 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்திருந்தார். இதற்காக அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 20 ஆயிரத்து 425 ரூபாய் செலுத்தி உள்ளார். இந்தநிலையில் 2014-ம் ஆண்டு மே மாதம் கோத்தகிரி பகுதியில் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தபோது மணிகண்டன் வீட்டிற்கு அருகே இருந்த 2 ராட்சத கற்பூர மரங்கள் வீட்டின் மீது சரிந்து விழுந்தன.

இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், வீடு பலத்த சேதமடைந்தது. எனவே அவர் வீட்டிற்கு காப்பீடு செய்து இருந்த காரணத்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என்று காப்பீடு நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த நிறுவனம் காப்பீட்டு தொகையை வழங்க இயலாது என இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.

அபராதம்

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் இது குறித்து கோத்தகிரி புளூ மாவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நுகர்வோர் சங்கத்தினர் ஊட்டியில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு தர மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தனர். 7 ஆண்டுகள் நடைபெற்ற வந்த இந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதில், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.58 ஆயிரம் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும், மேலும் ஆண்டுக்கு 12 சதவீத வட்டி மற்றும் வழக்கு செலவு 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து வழங்க உத்தரவு பிறப்பித்தது. மொத்தம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்டது.


Next Story