அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு இடிப்பு


அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு இடிப்பு
x

கும்பகோணத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடு இடிக்கப்பட்டது.

பெட்டி காளியம்மன்

கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டூகருப்பூரில் சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. பெட்டிகாளியம்மன் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 600 சதுரடி பரப்பளவுள்ள இடத்தை, கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, வீடு கட்டியிருந்தார். இந்தநிலையில் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை அப்புறப்படுத்தி கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இடிக்கப்பட்டது

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின் படி, கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா தலைமையில், தாசில்தார் முருகவேல், செயல் அலுவலர்கள் கிருஷ்ணகுமார், கணேஷ்குமார், ஆறுமுகம் மற்றும் ஊழியர்கள், பொக்லின் எந்திரம் மூலம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை இடித்து அப்புறப்படுத்தினர். மேலும் அந்த இடத்தில் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் என தகவல் பலகையை அதிகாரிகள் அமைத்தனர்.


Next Story