இடிந்து விழும் நிலையில் காணப்படும் வீடுகள்


கும்பகோணத்தில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த வீடுகளை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

கும்பகோணத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், அரசு ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகள் அனைத்திலும் அரசு ஊழியர்கள் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.

தற்போது இந்த குடியிருப்பில் உள்ள வீடுகள் பல இடிந்து விழும் நிலையில் உள்ளது. வீடுகளின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

மேற்கூரை இடிந்து விழுந்தது

இந்த குடியிருப்பில் உள்ள சில வீட்டின் ஜன்னல்கள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. மேலும் வீடுகளின் மேல்கூரையில் கான்கிரீட் காரைகள் எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.இதை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் வசித்து வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தநிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

புதிதாக கட்டித்தர வேண்டும்

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறுவர்கள் விளையாட அமைக்கப்பட்ட உபகரணங்களும் சேதமடைந்து காணப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story