தொரப்பள்ளி அருகே காட்டுத்தீயில் வீடுகள் சேதம்-ஆதிவாசி மக்கள் கவலை
தொரப்பள்ளி அருகே காட்டுத்தீயில் வீடுகள் சேதம்-ஆதிவாசி மக்கள் கவலை
நீலகிரி
கூடலூர்
கூடலூர் தாலுகா தொரப்பள்ளி அருகே அள்ளூர் வயல் பகுதியில் நேற்று மாலை காட்டு தீ பரவியது. இதுகுறித்து கூடலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், ஆதிவாசி மக்கள் சிலரின் வீடுகள் சேதம் அடைந்தது. இதனால் அவர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. இதை அறிந்த ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்தராஜ், நகராட்சி தலைவர் பரிமளா மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story