குன்னூர் பகுதியில் மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
குன்னூர் பகுதியில் மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்
குன்னூர்
குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. கடும் வறட்சியினால் தேயிலை செடிகளை தாக்கியிருந்த சிவப்பு சிலந்தி நோய் ஓரளவு சீராகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வேளையில் கடும் வெயில் நிலவியது. இரவு 10 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இந்த மழை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரியில் பலத்த மழையினால் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளன. மீண்டும் மழை பெய்தால் இந்த வீடுகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக தடுப்பு சுவர் அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.