காவல்துறை குடியிருப்புகளைவீட்டுவசதி வாரிய டி.ஜி.பி. ஆய்வு
காவல்துறை குடியிருப்புகளை வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்
கண்டமானடி
விழுப்புரம் அருகே கண்டமானடி பகுதியில் தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி வாரியம் சார்பில் உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை நேற்று காவல்துறை வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி. விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடியிருப்புகள் அனைத்தும் தரமான முறையில் கட்டப்பட்டுள்ளதா என்றும், அரசின் விதிமுறைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story