ஜமாபந்தியில் 106 பேருக்கு வீட்டு மனைப்பட்டா


ஜமாபந்தியில் 106 பேருக்கு வீட்டு மனைப்பட்டா
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 11:50 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 106 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

நாகப்பட்டினம்


நாகையில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 106 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

ஜமாபந்தி

நாகை தாலுகா அலுவலகத்தில் கடந்த மே மாதம் 30-ந் தேதியில் இருந்து நேற்று வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்துகொண்டு வருவாய் துறை சார்பில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 106 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்.

இதில் தெற்குபொய்கைநல்லூர், ஆபரணதாரி, பொன்வெளி, பாப்பாகோவில், கருவேலங்கடை, ஒரத்தூர், அகர ஒரத்தூர், புதுச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது தாசில்தார் ராஜசேகர், நில அளவையர் கீர்த்தி வாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மருத்துவ முகாம்

இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவுகளில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நகராட்சி பொறியாளர் விஜய் கார்த்திக் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story