வனஉயிரினங்களை பாதுகாப்பது எப்படி?


வனஉயிரினங்களை பாதுகாப்பது எப்படி?
x

வனஉயிரினங்களை பாதுகாப்பது எப்படி?

திருப்பூர்

தளி

வனஉயிரினங்களை பாதுகாப்பது எப்படி? என்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது.

வன உயிரின வார விழா

அரியவகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ள வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வனஉயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேசராம் கூறியதாவது:-

ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவை கொண்டாடும் விதமாக, கடந்த வாரம் பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகளிடையே உடுமலையில் பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடந்தது. மேலும் இணையவழி மூலமாக கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.முதல் நாளான இன்று (நேற்று) திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள 6 வனச்சரகங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வனஉயிரின வார விழா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு

அப்போது வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும் வனத்தின் பரப்பளவை அதிகரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டது. மேலும் வனம் மற்றும் வன உயிரினங்களை காப்போம் என சுற்றுலா பயணிகளால் உறுதிமொழி ஏற்கப்பட்டு கையெழுத்து பிரசாரம் தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த வாரம் முழுவதும் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து கையெழுத்து பிரசாரம், விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.

இதில் வனச்சரக அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் பலர் கலந்து கொண்டனர்.




Next Story