பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
x

பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்து உள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

பருத்தியில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்து உள்ளனர்.

மாவு பூச்சி தாக்குதல்

முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் கூறியதாவது:- கடந்த ஏப்ரல் மாதம் பெய்த கனமழைக்கு பிறகு போதுமான மழை பெய்யவில்லை. சித்திரை, வைகாசி மாதங்களில் வெப்பமான வானிலை காரணமாக பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

அதிக வெப்பநிலை காரணமாக பருத்தியில் அசுவினி இலைப்பேன் தவிர மாவுப்பூச்சிகளினாலும் தற்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாவுப்பூச்சி என்பது ஒரு வகையான சாறு உறிஞ்சும் பூச்சியாகும். இப்பூச்சிகள் இலையின் அடிப் பகுதியிலும் தண்டிலும் காய்களிலும் கூட்டாக இருந்து கொண்டு சாறினை உறிஞ்சுவதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கைகள்

பொதுவாக பூச்சிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டால் இதனை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வயலில் களைச்செடிகள் எதுவும் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 10 மி.லி. வேப்ப எண்ணெய் மருந்துடன் 10 மில்லி லிட்டர் மீன் எண்ணெய் சோப்புடன் கலந்து தெளிக்கலாம் அல்லது மாலதையான் 50 இ.சி.(அ) பிரப்பெனோபாஸ் 50 இ.சி.என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவிலும் ஒட்டும் திரவத்தை லிட்டருக்கு அரை மில்லி லிட்டர் சேர்த்து கலந்து செடிகள் நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பதன் மூலம் இப்பூச்சியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story