ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?


ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி?
x

தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண்மை அதிகாரி விளக்கம்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.இந்த நோயில் இருந்து தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் டிராக்டரில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையில் அடிப்புறத்தில் பீச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். ஒரு எக்டருக்கு 20 எண்கள் வீதம் விளக்கெண்ணெய் அல்லது ஒட்டும் பசை தடவிய 5-க்கு ஒன்றரை அடி நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கிரைசோபெர்லா இரைவிழுங்கியினை ஒரு எக்டருக்கு ஆயிரம் எண்கள் வீதம் தென்னந் தோப்புகளில் வெளியிட்டு வெள்ளை ஈக்கள் பரவுதலை கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்க கூடாது. இவ்வாறாக தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story