விவசாய பயிர்களை அழுகாமல் பாதுகாப்பது எப்படி?


விவசாய பயிர்களை அழுகாமல் பாதுகாப்பது எப்படி?
x

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பயிர்களை அழுகாமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் விளக்கி உள்ளார்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பயிர்களை அழுகாமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் விளக்கி உள்ளார்.

அழுகும் அபாயம்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தற்போது மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் விவசாய நிலங்களில் பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. பாடந்தொரை, அள்ளூர் வயல் மற்றும் ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர். தொடர் மழையால் வாழைக்கன்றுகள் உள்ளிட்ட பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதற்கிடையே கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி தொடர் கனமழையால் கூடலூர் பகுதியில் விவசாய பயிர்களின் நிலை குறித்து நேற்று குனில் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம், விளைநிலங்களில் தண்ணீா தேங்குவதால், வாழைக்கன்றுகள் அழுகும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வடிகால் வசதி

அப்போது தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது:- தென்மேற்கு பருவமழையால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க விவசாயிகள் அனைவரும் தங்கள் தோட்டத்தில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். இஞ்சியில் அழுகல் நோய் வர வாய்ப்பு உள்ளதால், பேசிலஸ் சப்டிலிசை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் வீதம் கலந்து வேர்களுக்கு ஊற்ற வேண்டும்.

குறுமிளகில் தென்படும் வாடல் நோயை தவிர்க்க 1 சதவீதம் போர்டோ கலவை அல்லது ட்ரைகோ டெர்மா விரிடியை 5 கிராம் விதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் வேர்களுக்கு ஊற்ற வேண்டும். அதிகப்படியான காற்று காரணமாக வாழைகள் சேதம் அடையாமல் தடுக்க 30 முதல் 45 நாட்கள் ஆன மரங்களுக்கு மண் அணைக்க வேண்டும். வாழைகளுக்கு முட்டுக்கொடுத்து சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

அழுகல் நோய்

மேலும் பேசிலஸ் சப்டிலிஸ் அல்லது ட்ரைகோ டெர்மா விரிடியை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து, அதை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து வாழை மரங்களுக்கு இடுவதன் மூலம் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story