பேரிடர் காலத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?


பேரிடர் காலத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?
x

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவினர் பேரிடர் காலத்தில் சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவினர் பேரிடர் காலத்தில் சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

செயல் விளக்கம்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழு 4-வது பட்டாலியன் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலத்தில் சிக்கிக் கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு மனோகர், குரூப் கமாண்டர் பிரவீன் பிரசாத், டீம் கமாண்டர் விவேக் ஸ்ரீ வாஸ்து ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

பருவநிலை மாற்றத்தால் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற இயற்கை பேரிடர் நிலநடுக்கம், கட்டிட இடிபாடுகள் மற்றும் இதர பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கவே இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒத்திகை நிகழ்ச்சி

ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் குழு கட்டிடங்களில் மாட்டிக் கொள்பவர்களை முதலுதவி அளித்து ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தி அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்வது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். பின்னர் இடிபாடுகளில் சிக்கியவர்களை ரோப்முறையில் காப்பாற்றுவது போன்ற செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் நவீன உபகரணங்கள், ஆபத்து காலங்களில் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகளை செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் குறிப்பாக பேரிடர் காலங்களில் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்டு ஆபத்தில் உள்ளவர்களை மீட்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி, சிவகாசி சப்-கலெக்டர் பிருதிவிராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸ், தீயணைப்பு துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story