சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் மனிதசங்கிலி


சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் மனிதசங்கிலி
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

தென்காசி

நாட்டில் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், மனிதநேயம் மற்றும் சமூக அமைதியை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். அதன்படி, தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை மனித சங்கிலி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் தலைமை தாங்கினார். பழனி நாடார் எம்.எல்.ஏ. மனித சங்கிலியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது யாகூப், ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் குமார், சந்திரசேகர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவருணன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story