போதைப்பொருள் தடுப்பு குறித்த மனித சங்கிலி


போதைப்பொருள் தடுப்பு குறித்த மனித சங்கிலி
x

போதைப்பொருள் தடுப்பு குறித்த மனித சங்கிலி கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி;

கள்ளக்குறிச்சியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த மனித சங்கிலி கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் இருந்து துருகம் சாலை, சேலம் மெயின்ரோடு, காந்தி ரோடு, கச்சேரி சாலை, கச்சராயப்பாளையம் சாலையின் இருபுறமும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கைகோர்த்தபடி நின்றனா்.

அப்போது போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசன், தாசில்தார் விஜய் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story