காயல்பட்டினத்தில் மனித சங்கிலி போராட்டம்


காயல்பட்டினத்தில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி அளவில் காயல்பட்டினம் மகாத்மா காந்தி நினைவு நுழைவு வாயிலிருந்து காயப்பட்டினம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அல்அமீன் தலைமையில் அனைவரும் மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர். இதில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பி என்ற துரை காக்கா, பொது செயலாளர் நவாஸ் அகமது, மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் முகமது ஹாசன், மாவட்ட துணை தலைவர் பாதுல் அஸ்ஹாப், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக நகர செயலாளர் ஜாகிர் உசேன், மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் மாஜா, வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் மீரா சாகிபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி தமிழ் குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரத்னாபுரி கிளை அமைப்பு செயலாளர் வருண் நன்றி கூறினார்.


Next Story