மனித சங்கிலி போராட்டம்
8 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் மத சார்பற்ற அனைத்துக்கட்சியின் ஜனநாயக அமைப்புகள் சார்பில் விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நரிக்குடி, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 8 இடங்களில் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், பொது துறைகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சமூகநல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 8 இடங்களிலும் நடைபெற்ற போராட்டத்தில் 1,100 பேர் கலந்து கொண்டனர். சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் சிவகாசியிலும், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லிங்கம் ராஜபாளையத்திலும், மாநில குழு உறுப்பினர் ராமசாமி ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கலந்து கொண்டனர். விருதுநகரில் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முருகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.