அனைத்து கட்சிகள் சார்பில் மதநல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்


மதுரையில் அனைத்து கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மதுரை


மதுரையில் அனைத்து கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

மனிதசங்கிலி போராட்டம்

மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட விடுதலை கழகம், மக்கள் விடுதலை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் மதநல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் ரெயில்வே நிலையத்திலிருந்து சிம்மக்கல் வரை நடந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் எம்.பி.வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன், காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசினர்.

போலீஸ் பாதுகாப்பு

அப்போது மத்திய பா.ஜ.க. அரசு சிறுபான்மையினருக்கு எதிராக நிறைவேற்றி வரும் சட்டங்களை திரும்ப பெற கோரியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டங்களை பா.ஜ.க. நிறைவேற்றுவதாக கூறியும் கண்டன பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பி கைகளை கோர்த்தபடி அணிவகுத்து வரிசையாக நின்றனர். இதையொட்டி போலீசார் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Next Story