மனிதநேய மக்கள் கட்சி 15-வது ஆண்டு தொடக்க விழா


மனிதநேய மக்கள் கட்சி 15-வது ஆண்டு தொடக்க விழா
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சி 15-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.

தென்காசி

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சி 15-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் செய்யது அலி பாதுஷா தலைமையில் நடைபெற்றது. த.மு.மு.க. நகர செயலாளர் முகம்மது அசன், நகர பொருளாளர் முகைதீன், நகர துணைத்தலைவர் அப்துல் காதர், நகர துணைச்செயலாளர்கள் சமதானியா சாகுல், சேக் செய்யது அலி, சாகுல் ஹமீது, ஆர்.எஸ்.உசேன் ஆகியோர் முனிலை வகித்தனர்.

த.மு.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் நயினார் முகம்மது, மாவட்ட செயலாளர் எம்.எஸ்.அப்துர் ரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது அலி, பஷீர் ஒலி, மாவட்ட துணைத்தலைவர் பிலால், மாவட்ட துணைச்செயலாளர் மஜித், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது, தகவல் தொழில்நுட்ப அணி எம்.எஸ்.ஹமீது, நகர இளைஞர் அணி செயலாளர் ஜாபர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story