மனிதநேய வார விழா


மனிதநேய வார விழா
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறை சார்பில் மனிதநேய வார விழா நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், மனிதநேய வார விழா ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமை தாங்கி சமூக நீதி குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போலீஸ் துணை சூப்பிரண்டுகள் யசோதா, விஜயலட்சுமி, நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா, மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் பங்கேற்றனர்.


Next Story