காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம்
கொரடாச்சேரி அருகே காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம் நடந்தது.
திருவாரூர்
கொரடாச்சேரி, ஆக.21-
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மணக்கால் அய்யம்பேட்டையில் காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தென்னிந்திய மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. மணக்கால் வைகுண்ட நாராயண பெருமாள் ஆலயம் முன்பாக மகேசன் சக்தி இயக்கம் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்துக்கு மகேசன் சக்தி இயக்க நிறுவனர் தென்னரசு தலைமை தாங்கினார்.உண்ணாவிரதத்தில் காவிரி கோதாவரி நதி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காவிரியில் வீணாகும் மழை நீரை உரிய முறையில் பயன்படுத்த திட்டங்களை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story