சாராயம் விற்ற கணவன்- மனைவி கைது


சாராயம் விற்ற கணவன்- மனைவி கைது
x

சாராயம் விற்ற கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது புள்ளானேரி அருகே சாராயம் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப்பகுதிக்கு போலீசார் சென்றனர்.

அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 61), அவரது மனைவி லட்சுமி (52) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 58 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story