ஆறுமுகநேரி அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது
ஆறுமுகநேரி அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அடுத்துள்ள மூலக்கரை கிராமம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால் மகன் கார்த்தீசன் (வயது 40). தொழிலாளி. இவரது மனைவி தங்கம். தனது மனைவியிடம் மோட்டார் சைக்கிள் வாங்க தங்க நகையை கேட்டு கார்த்திகேயன் தகராறு செய்துள்ளார். மனைவி தங்க நகையை கொடுத்து மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனாலும் ஏற்றுக்கொள்ளாத கணவர் தனது மனைவியை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக மனைவி தங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து கார்த்தீசனை கைது செய்தனர்
Related Tags :
Next Story