புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது


புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது
x

புதுப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (வயது 29), டிராக்டர் டிரைவர். இவருக்கும் இவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ரங்கசாமி காமராசவல்லி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி (21) என்பவரை கடந்த மே மாதம் 22-ந் தேதி 2-வது திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே ரங்கசாமிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருப்பதை அறிந்த தமிழ்ச்செல்வி அது பற்றி தனது கணவரிடம் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story