புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் அதிரடி கைது


புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் அதிரடி கைது
x

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் மாமியார் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் மாமியார் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

புதுப்பெண் தற்கொலை

நாகர்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் வினு. இவருடைய மகள் அபிராமி (வயது 22). இவருக்கும், பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் காலனியை சேர்ந்த மனோஜ் (24) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனோஜ் நாகர்கோவிலில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். அபிராமி 2மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி இரவு அபிராமி தனது அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செல்போன் ஆடியோவில்...

இதுதொடர்பாக வினு பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மனோஜின் தாயார் நாகேஸ்வரி மற்றும் பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் தனது மகளிடம் தகராறு செய்து, தொல்லை கொடுத்து வந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

அபிராமி தற்கொலை செய்வதற்கு முன்பு தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக செல்போனில் உருக்கமாக பேசிய ஆடியோ வெளியானது. அதில் அபிராமி, 'அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். மனோஜ் அம்மாவும், பாட்டியும் எங்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். எனவே இந்த முடிவை தேடி கொள்கிறேன். என் சாவுக்கு மனோஜ் அம்மாவும், பாட்டியும் தான் காரணம்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

கணவர் அதிரடி கைது

இதுபற்றி நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த அறிக்கையில், தாலி கட்டிய மனைவிக்கு கணவர் பாதுகாப்பு கொடுக்காததால், அந்த கணவர் குற்றவாளி என்று குறிப்பிட்டு இருந்ததாகவும், அதன் பேரில் மனோஜை பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நேற்று கைது செய்தார். மேலும் நாகேஸ்வரி மற்றும் கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்்தி வருகிறார்கள்.


Next Story