கள்ளக்காதலை கண்டித்த கணவர் கொலை; அந்தமான் தப்ப முயன்ற மனைவி மதுரை விமான நிலையத்தில் கைது
கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்துவிட்டு அந்தமான் தப்பி செல்ல முயன்ற மனைவியை மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்துவிட்டு அந்தமான் தப்பி செல்ல முயன்ற மனைவியை மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
கணவர் மாயம்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். பிச்சைக்கனி வெளிநாட்டில் ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மே மாதம் 25-ந்தேதி அன்று சொந்த ஊர் திரும்பி உள்ளார். மே மாதம் 27-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி சாந்தி தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து தேவிபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சாந்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவருடைய செல்போனை வாங்கி ஆய்வு நடத்தினர். அதில் அவரது உறவினர்களான பார்த்திபன் மற்றும் கலைமோகன் என்ற இருவருடனும் சாந்தி அதிகமாக பேசியிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் தேவிபட்டினம் அருகே உள்ள சீனங்குடி கிராமத்தை சேர்ந்த கலை மோகன்(26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்தனர்
இதில் சாந்திக்கு, அவரது உறவினர்களான பார்த்திபன், கலை மோகன் ஆகிய இருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. கணவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததால் அவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்ற எண்ணத்தில் சாந்தி கலைமோகனிடம் தனது கணவரை கொலை செய்து விடுமாறு தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து கலைமோகன், பார்த்திபன் ஆகிய இருவரும் பிச்சைக்கனியை மதுகுடிக்க வைத்துள்ளனர். போதை மயக்கத்தில் இருந்த பிச்சைக்கனியை இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் உடலை பல துண்டுகளாக வெட்டி அரசலூர் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் உடலை வீசினர். இந்த ெகாலை தொடர்பாக கலை மோகனை போலீசார் கைது செய்தனர். சாந்தி தலைமறைவாகி விட்டதும், பார்த்திபன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது.
மனைவி கைது
இந்தநிலையில் பிச்சைக்கனியின் மனைவி சாந்தி ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் இருந்து மதுரை சென்று அங்கிருந்து விமானத்தில் அந்தமான் தப்ப முயல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் மதுரை விமான நிலையத்தில் வைத்து சாந்தியை கைது செய்தனர்.
ராமநாதபுரம் அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே இந்த கொலை வழக்கில் மலேசியா தப்பி சென்ற பார்த்திபனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விமான நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.