தூத்துக்குடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
தூத்துக்குடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 42). இவருடைய மனைவி ஆறுமுகக்கனி (35). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். செல்வக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் செல்வக்குமார் குடிபோதையில் ஆறுமுகக்கனியின் செல்போனை, அவருக்கு தெரியாமல் எடுத்து விற்பனை செய்து விட்டாராம். இதனை ஆறுமுகக்கனி கண்டித்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார் கத்தியால் ஆறுமுகக்கனியை குத்தினாராம். இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகக்கனி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் செல்வக்குமார் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டாராம். இதனால் அவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் செல்வக்குமார் மீது தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.