ஹைட்ரோகார்பன் திட்டங்கள் காவிரிப்படுகையை முற்றிலுமாக அழித்துவிடும்


ஹைட்ரோகார்பன் திட்டங்கள் காவிரிப்படுகையை முற்றிலுமாக அழித்துவிடும்
x

ஹைட்ரோகார்பன் திட்டங்கள் காவிரிப்படுகையை முற்றிலுமாக அழித்துவிடும்

மயிலாடுதுறை

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி, தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு எழுத்து மூலம் விடையளித்தார். அதில், 'தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் கைவிடப்படவில்லை' என்று அப்பதிலில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பட்டியலையும் வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 31 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஹைட்ரோகார்பன் திட்டங்கள் காவிரிப்படுகையை முற்றிலுமாக அழித்துவிடும். எனவே இந்த திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story